பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
பட்டா வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பழங்குடி இன மக்கள்.
கடம்பத்தூர் அருகே பழங்குடியினசமூகத்தை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் சுமார் 50 குடும்பங்கள் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பல்வேறு குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளதாகவும், இதில் ஆறு குடும்பங்களுக்கு மட்டும் விடுபட்டு போனது. விடுபட்டுள்ள ஆறு குடும்பங்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பலமுறை ஊராட்சி, வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி 5.வது வாடு உறுப்பினர் ஜானகிராமன், சுதா தேவி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் கிருஷ்ணன், ராஜேஷ், முருகம்மாள், வள்ளியம்மாள் வீரராகவன், ஜீவா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.