திருவள்ளூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

51 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;

Update: 2023-08-23 06:58 GMT

மக்களுக்கு விரைவாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களாம்பாக்கம் ரவி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

திருவள்ளூர் அருகே 51பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் தாமதம் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட களாம்பாக்கம் ஊராட்சியில் 65 ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த குடும்பத்தினர் பல ஆண்டு  காலமாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் வாயிலாக அரசுக்கு தெரிவித்து வந்த நிலையில் அதே பகுதியில் 51 ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக தாமதம் காட்டி வருவதாகவும்  அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே இந்த மக்களுக்கு விரைவாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களாம்பாக்கம் ரவி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News