சாதி பெயரை சொல்லி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் மனு
பொன்னேரி அருகே சாதி பெயர் சொல்லி அடித்து தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
அரசுக்கு சொந்தமான பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக் கேட்ட நபரை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி தேவப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆக உள்ளார். அப்பகுதியைச சேர்ந்த சிலர் ஆதிதிராவிட மக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து அதனை மறைத்து வழி விடாமல் சுவர் எழுப்பும் பணியை தொடங்கிள்ளனர்.
இதுகுறித்து கண்ணதாசன் வழிவிடாமல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபரை இது என்ன நியாயம் என கேட்டபோது, அவர் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மற்றும் கண்ணதாசனின் சட்டையை கழட்டி கைகளை பின்னால் கட்டி விட்டு உருட்டு கட்டைகளால் கொடூரமாக தாக்கினார்களாம்.இதனை தடுக்கச் சென்ற கண்ணதாசனின் தாயாரையும் தகாத வார்த்தைகளால் கேவலமாக திட்டி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கண்ணதாசன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதக்காலம் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கோபி நாயனார், மற்றும் மாநில அரசியல் குழுச் செயலாளர் நீல வானத்து நிலவன் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாணை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் சாம்சன், மாநில நிர்வாகி வழக்கறிஞர் செஞ்சிசெல்வம், கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நேசகுமார்,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு, நிர்வாகிகள் தங்கராசு, அபுபக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.