அதிமுக கிளை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் மனு
திருவள்ளூர் அருகே இளைஞரை தாக்கிய அதிமுக கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெருமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் -27 இவர் கடந்த 23 ந் தேதி அன்று வீட்டிலிருந்து மாலை 3 மணிக்கு வெளியே சென்ற அவரை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரின் மகனான சத்தியா அவனுடைய கூட்டாளிகள் கர்னல், ஆண்டனி, தருமன்தாவீத் ,கலைவாணன், மதன் ஆகியோர் விஜயை வழிமறித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் விஜய்க்கு முகத்தில் 3 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இது சம்பந்தமாக விஜயின் மனைவி நான்சி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் தனது கணவரை தாக்கிய சத்யா உட்பட அவனோடு கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நான்சி மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் சத்யா உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சத்யாவின் தாய் மேனகா தனது மகனை வழிமறைத்து விஜய் செயின் பறிப்பு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா காவல் நிலையத்தில் எதிர் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக கிளை செயலாளர் சத்யாவால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சத்யா அவனது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட விஜயின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.