திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-09-17 03:00 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், ரயில் நிலையம் அருகில் உள்ள பெரிய குப்பம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபான கடையை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் அப்பகுதி மக்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும், மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மார்க் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், அங்கு மது குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் திரிகின்ற மக்கள் மத்தியில் நாங்கள் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும் சென்று வீடு திரும்பும் போது அங்கு குடித்துவிட்டு சிலர் கேலி, கிண்டல் செய்வதாகவும், இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைவதுடன் ஒரு நிலைமையில் குடியிருக்கும் வீடுகளை காலி செய்து சிலர் வெளியே செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக மக்கள் கூடுகிற இடத்தில் இதுபோன்ற மதுபான கடைகள் இருப்பதால் இப்பகுதி குடியிருக்க கூடிய குடியிருப்பு வாசிகள் என அனைவரும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வருகிறோம், இதுவரை நான்குக்கு மேற்பட்ட முறையில் நாங்கள் மனுக்கள் கொடுத்து விட்டோம் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

உடனடியாக மதுபான கடை அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பெரிய குப்பம் பொதுமக்கள் மற்றும் 26.வது வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி ஆகியோர் ஒன்றிணைந்து வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags:    

Similar News