மிகஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரண உதவி
திருவள்ளூர் மாவட்டத்தில் மிகஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.;
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது.
பெரியபாளையம் அருகே மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னிகைபேர், திருக்கண்டலம், பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அரசு அறிவித்த ₹.6000 நிவாரண தொகையை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்திய வேலு வழங்கினார்.
மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அரசு அறிவித்த நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர், திருக்கண்டலம், ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகளில் அரசு அறிவித்த ₹6000 நிவாரணத் தொகையை வாங்கி வருகின்றனர். கன்னிகைப்பேரில் 1600 பேருக்கு திருக்கண்டலம் ஊராட்சியில் 1400 குடும்ப அட்டைதாரர்களுக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ. சத்திய வேலு வழங்கினார்.
இதில் திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், ஒன்றிய பொருளாளர் குப்பன், நிர்வாகிகள் நீதி, விஜயகுமார், தியாகராஜன், சரண்ராஜ், ஜெயக்குமார்,பெய்லி, கமலேஷ், வியாழ வந்தான், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லிங்கா துரை, தினேஷ், ஆகியோர் உட்பட பல கலந்து கொண்டனர்.
இதே போல் பெரியபாளையம், ஊராட்சியில் 3188 பேருக்கு மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் கோகிலா, செயலாட்சியர் இளையராஜான், முதுநிலை எழுத்தர் மாரி ஆகியோர் வழங்கினர். குமரப்பேட்டை ஊராட்சியில் 997பேருக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் பாபு, துணைத் தலைவர் நாகபூஷணம் ஆகியோர் வழங்கினர்.ஆலப்பாக்கம் ஊராட்சியில்221 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம், துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.
தாமரைப்பாக்கம் ஊராட்சியில்1675 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் வழங்கினார். இதேபோல் பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பேரூர் தி.மு.க. செயலாளர் பி.முத்து வழங்கினார் இதில் செயலாளர்கள் பாஸ்கர, நிர்வாகிகள் கரிகாலன், ஜி.பி. வெங்கடேசன்,கோபிநாத், ரமேஷ், நிலவழகன், கலையரசி, திராவிட சத்யா, பாலாஜி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.