திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி பெயிண்டர் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி பெயிண்டிங் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
விபத்தில் இறந்த தண்டபாணி.
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி ஏறி இறங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி இவர். வீடுகளுக்கு பெயிண்டிங் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் வில்லிவாக்கத்தில் இருந்து இவரது இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் காக்களூர் பகுதியில் சென்ற போது லாரி ஒன்று இவரது அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தண்டபாணியின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி ஹெல்மெட் அணிந்திருந்த தலை மீது லாரி ஏறி இறங்கியதில் தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் யார்? லாரி தற்போ எங்கு உள்ளது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.