பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிசன் படுக்கை தயார்

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கை வசதி தயார்

Update: 2021-05-15 13:26 GMT

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளதாகவும் வருகிற திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்க படுவார்கள் எனவும் சுகாதாரத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது அதிக அளவில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி ஆக்சிஜன் படுக்கை, சாதாரண படுக்கை மற்றும் ஐ.சி.யு படுக்கை வசதி என மொத்தம் 1685 படுக்கைகள் உள்ள நிலையில், அதில் 988 படுகைகள் நிரம்பியுள்ளதாகவும் தற்போது 697 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள 250 மொத்த படுக்கைகளும் நிரம்பியதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து மாவட்ட தலைநகரை ஒட்டிய திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனுக்கு சொந்தமான இந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது 54 படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் அமைக்கும் பணி முடிந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை முதல் கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News