வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-11 05:30 GMT

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் காரிய மாணிக்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கருக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகாமை அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் மூன்று தலைமுறையாக சுமார் 150 வருட காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாஷியம் ( எ) கோபி என்பவர் காரிய மாணிக்க பெருமாள் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா என்று சொல்லிக்கொண்டு அரசுக்கு சொந்தமான நிலத்தை கோவில் பெயரில் எந்த ஒரு அரசு உத்தரவு நீதிமன்ற ஆணையோ இன்றி வரி வசூல் செய்து வந்துள்ளனர்.

இவரது தாத்தா சீனிவாசன் என்பவர் (முன்னாள் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார்) கிராம நிர்வாக அலுவலராக இருந்த காரணத்தினால் எந்த ஒரு அரசு உத்தரவும் இன்றி மோசடியாக கிராம கணக்கில் சிவப்பு மையினால் எழுதி அதனை நகல் எடுத்து அப்பகுதியில் குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் நீங்கள் வசிப்பது கோவில் இடம் என்று மக்களை மிரட்டி ஆண்டுதோறும் வரி என்ற ஆயிரக் கணக்கில் அப்போது வசூலித்து வந்துள்ளார்.

தற்போது உள்ள அவரது பேரன் பாஷ்யம் தற்போது அப்பகுதி மக்களிடம் வரி என்ற பெயரில் லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்க சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகள் திட்டி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும்,100க்கும் மேற்பட்டோர் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயிலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், தாங்கள் அப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டிக் கொண்டு வசித்து வருவதாகவும், பஞ்சாயத்துக்கு முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை செலுத்தி வருகிறோம்.  பாஷ்யம் என்பவர் தங்களை மிரட்டி ஒரு வீட்டிற்கு 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை அடாவடி வசூல் செய்து வருகிறார்.

பணத்தை கட்ட மறுக்கும் குடும்பங்களை விரட்டி வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அரசு அதிகாரிகளை சந்தித்து சென்றாள் அந்நியர்கள் போல் விரட்டுவதாகவும், அந்த இடத்தில் வேண்டுமென்றால் ரூபாய் 20.லட்சம் வழங்கினால் நாங்களே வீடு கட்டி பட்டா வழங்குவேன் என்று பாஷ்யம் தெரிவித்து வருகிறார்.

நாங்கள் அன்றாடக் கூலி வேலைக்கு சென்று பிழப்பு நடத்தி வருவதாகவும், அவ்வளவு ரூபாய்க்கு எங்கே எங்கே போவோம் என்று கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் தெரிவித்ததோடு. சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News