இணையவழி கலந்தாய்வுக்கு ஒப்புதல் : அரசுக்கு நன்றி தெரிவிப்பு
இணையவழி கலந்தாய்வு நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழி கலந்தாய்வு - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - சார்பில் நன்றி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி அன்றும் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுதிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் காப்பாளர்கள், பட்டதாரி ஆசிரியர் காப்பாளர்களுக்கு மாவட்டத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணி மாறுதல் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இணையவழி மூலமாக இயக்குநரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் என ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் ஐ.ஏ.எஸ் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஒளிவு மறைவு அற்ற கலந்தாய்வு நடத்த பரிந்துரை செய்த முதலமைச்சருக்கும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்-க்கும், செயலாளர் லட்சுமி பிரியாவுக்கும் , ஆணை வழங்கிய இயக்குநர்ஆனந்த்-க்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
மேலும் விடுதி காப்பாளர்கள் மூன்று கல்வி ஆண்டுகள் மட்டுமே விடுதிகளில் பணியில் இருக்க வேண்டும் என வழிக்காட்டு நெறிமுறை வகுக்கப்பட்டு இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பல மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் கண்டுக்கொள்ளாத நிலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காப்பாளர்கள் செயல்பாடு இன்மையால் மாணவர்கள் சேர்க்கை மிகப் பெரியளவு குறைந்துள்ளது.
இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுதிகளை மட்டும் மாற்றம் செய்து பணியாற்றி வருகின்றனர் என்பதை இயக்குநர் பார்வைக்கு இதன் வாயிலாக கொண்டுவருகிறேன். அவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி புதிய காப்பாளர்களை கல்ந்தாய்வு மூலம் நியமித்து மாணவர்கள் சேர்க்கையை அதிக படுத்தி உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சா.அருணன் நன்றி தெரிவித்தார்.