ஓடிபி மூலம் ஆன்லைன் மோசடி; திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

ஓடிபி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனே தெரிவிக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Update: 2021-08-24 06:05 GMT

பைல் படம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொதுமக்களிடம் இணையதள மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.  நீங்கள் ஆர்டர் செய்யாமல் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துள்ளதாகவும், அதனை கேன்சல் செய்ய உங்களுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை சொல்லுங்கள் என யாரேனும் உங்களிடம் கேட்டால் அந்த எண்ணை பகிர வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறை சார்பாக, ஓ.டி.பி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டு விட்டதா, உடனே பதட்டமடைய வேண்டாம். மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News