திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் சாவு: ஒருவர் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானர்; ஒருவர் படுகாயமடைந்தார்.;
திருவள்ளூர் அடுத்த மப்பேடு காந்திபேட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிட்டு குமார்(25). சானியா சாபர்(29), ஆகியோர் கடந்த 1 வருடமாக தங்கி தங்கியிருந்து மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இரவு வேலை முடித்து விட்டு அருகே உள்ள மண்ணூர் கிராம பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக தாங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சானியா சாபர் ஓட்டினார். பிட்டு குமார் பின்னால் அமர்ந்து சென்றார். அவர்கள் மப்பேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சானியா சாபர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த பிட்டு குமாருக்கு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி மப்பேடு போலீஸ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.