இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அரசு அதிகாரிகளால் ஏமாற்றப்பட்ட மூதாட்டி
கும்மிடிப்பூண்டி அருகே இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அரசு அதிகாரிகளால் மூதாட்டி ஏமாற்றப்பட்ட சம்பவம் ஆர்.டி.ஐ. தகவலில் அம்பலமாகியது.
கும்மிடிப்பூண்டி அருகே இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அரசு அதிகாரிகளால் மூதாட்டி ஏமாற்றப்பட்ட சம்பவம் ஆர்.டி.ஐ. தகவலில் அம்பலமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார் மேடு கிராமத்தில் வசித்து வருபவர் ஏகத்தை (வயது 76).கூலி தொழிலாளியான இவரது கணவர் சடையன் கிணறு வெட்டும் போது கிணற்றில் புதைந்து உயிரிழந்தார். மூதாட்டியின் மகன் தங்கராஜ் உடல்நல குறைவாள் உயிரிழந்த நிலையில். ஏகாத்தை மட்டும் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
வயது முதிர்வின் காரணமாக கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் வேலைக்குச் சென்று அதில் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் PMYA திட்டத்தில் அரசின் இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டினை ஒப்பந்ததாரர் வீட்டை கட்டித்தருவதாக கூறி வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை லாவகமாக பேசி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் வாங்கி கொண்டுள்ளார்.
ஆனால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வீட்டின் கட்டுமான வேலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டப்படாமலே உள்ளது. மேலும் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. அதிலும் வீடு கட்டாமலே வீடு கட்டியதாக பொய்யான புகைப்படங்களை வைத்து வங்கிக் கணக்கில் பணப்பரிப்பாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மூதாட்டியின் வீடு கட்டி முடிக்கப்பட்டதாகவும், அதற்கான முழு தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிணற்றை காணோம் என்ற வடிவேல் பட பாணியில் வீடு கட்டாமலே மூதாட்டியிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இப்பகுதியை குறிவைத்து 50.க்கும் மேற்பட்ட வீடுகள் மோசடி செய்யப்பட்ட பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணமாகவோ அல்லது வீட்டினை சரி செய்தோ வழங்க வேண்டும். வீடு கட்டாமலே அரசின் பணத்தை மோசடி செய்த அரசு அதிகாரிகளை இனம் கண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் இப்பகுதியில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் 30.வீடுகள் கட்டாமலே வீடு கட்டியதாக பணம் எடுக்கப்பட்டதும், பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வீடு இல்லாமல் கொட்டும் மழையில் பரிதவிக்கும் மூதாட்டியின் நிலைதான் என்ன ?? அரசு பணத்தை கையாடல் செய்த அரசு அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்பதை மாவட்ட நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் என குமுறுகின்றனர் அப்பகுதி மக்கள்.