பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா: அதிகாரிகள் ஆலோசனை

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை குறித்து ஆலோசனைக் கூட்டம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2023-07-15 02:00 GMT

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது புகழ் பெற்ற எழுந்தருளி ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகின்ற 17ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆடி திருவிழா தொடங்குகிறது.

இவ்விழானது தொடர்ந்து 14.வாரங்கள் வெகு விமர்சையாக கோலாகலமக நடைபெறும். கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதிகளை எடுத்து தங்கி மொட்டை அடித்து பொங்கல் வைத்து உடல் முழுவதும் வேப்பிலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் எடுத்து கோவில் சுற்றி வளம் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது குறித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அலுவலருமான சுகப்புத்திறன் தலைமையில் நடைபெற்றது.

எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை ரமேஷ், துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி, பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோவில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பெரியபாளையம் பஸ் நிலையம் கோவில் சுற்றி என பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, ஆடி திருவிழாவின் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதார பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்துவது, வாரத்தில் ஏழு நாட்களில் நான்கு நாட்கள் கோவில் சுற்றி கொசு மருந்தை தெளிப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது வாரத்தில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, கூடுதலாக கைவறைகளை அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பு பணியில் 150 க்கு மேற்பட்ட போலீசார் 50-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் என 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை வாரந்தோறும் பாதுகாப்பு பணியில் அமர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் கோகிலா பிரபாகரன், திருமலை சிவசங்கரன், ஜமுனா அப்புன், குணசேகரன், குழந்தைவேலு, தாமரைப்பாக்கம் சரவணன், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News