திருவள்ளூர் அருகே அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்

திருவள்ளூர் அருகே ஸ்ரீவரசித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.;

Update: 2023-06-10 09:44 GMT
நோட்டு புத்தகம் பெற்ற பள்ளி மாணவிகளுடன் அறக்கட்டளை நிர்வாகிகள்.

பாகல்மேடு ஊராட்சியில் வரசித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளையின் சார்பில் 125 அரசு பள்ளி மாணவி மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான இலவச நோட்டு பேனா பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு ஊராட்சியில் ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அறக்கட்டளை நிறுவனர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றியம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை சார்ந்த 125 மாணவ, மாணவியருக்கு ஒரு வருடத்திற்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பேனா அடங்கிய கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை போர்ட் சிட்டி நிர்வாகிகள் முத்துசாமி, ராஜசேகர்,சந்திரசேகர், ஸ்ரீராம்நாகராஜ், மற்றும் பாகல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் தேவகிதங்கப்பிரகாசம், மாம்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகலஷ்மிசங்கர், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார், ஊராட்சி செயலர்கள் உமாபதி,தனசேகரன்,குட்டி, ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.

இறுதியில் ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி திருமதி.திவ்யா நன்றி கூறினார்.

இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை பெற்று சென்றனர். தமிழகத்தில் நாளை மறு நாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு இருப்பது அவர்களது தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்ததாக கூறினார்கள்.

Tags:    

Similar News