நெகிழி பை இல்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினம் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி.

Update: 2024-07-03 06:30 GMT

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச நெகிழி பை இல்லாத தினம்-2024 முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை 3 ம் தேதி சர்வதேச நெகிழி ஒழிப்பு தினம் ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் நெகிழி ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு

நெகிழி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இதில் 200.க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு காமராஜர் சிலை வரை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்து மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சப்பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

துணிப்பைகள் தைக்கும் ஊக்குவிக்கும் விதமாக இருளர் சமுதாய மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் அருண்குமார், கயல் விழி, சபரிநாதன், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News