3 நாட்களாக இதுவரை ஒரு வேட்புமனு கூட தாக்கலாகவில்லை
திருவள்ளூரில் 3 நாட்கள் ஆகியும் இதுவரை வேட்புமனை தாக்கல் செய்யவில்லை ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியுள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் அறிவித்தது.
இந்த மாதம் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும், வருகின்ற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், வேட்பு மனு பரிசினை வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும், வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30 ம் தேதி வரை எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகமான டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் வேட்பு மனு தாக்கல் பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வெளிப்பகுதி, உட்பகுதி என அனைத்து இடங்களிலும் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
கடந்த 20ம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்கி 3 நாளாகியும் இது வரையிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் எந்த அரசியல் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் துவங்கி மூன்று நாட்கள் ஆகியும் திருவள்ளூரில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.