உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணி

திருவள்ளூர் நகராட்சியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணியா சென்றனர்.

Update: 2021-09-13 13:07 GMT

பைல் படம்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் நகராட்சியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மனநிலை பிரிவு சார்பில்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் நகராட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியின்போது கைகளில் தற்கொலை எண்ணத்தை கைவிட வலியுறுத்தியும், மன அழுத்தத்தை குறைக்க வழி முறைகளையும், மன அழுத்தத்தின்போது தற்கொலை முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போட வேண்டும் என்பன உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், மனநல மருத்துவரை கலந்து ஆலோசிக்க கோரியும், யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கைகளில் பதாகைகளை ஏந்தி அரசு மருத்துவமனை வரை பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மன நலப் பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News