அதிகத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்
அதிகத்தூர் பகுதியில் 110 வாட் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே அதிகத்தூர் பகுதியில் மோசூர் பகுதியிலிருந்து மணவாளநகர் வரை 110 மெகாவாட் உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்து செல்லும் பணியை தமிழக மின்வாரியத் துறையால் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிகத்தூர் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் அங்கிகரிக்கப்பட்ட சிலரதது நிலம் உள்ளதாகவும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்தால் அப்பகுதியை சுற்றி யாரும் வீடு கட்ட முடியாது எனவும் நில உரிமையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.