6 வழி சாலை பணிகளை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,எ.வ.வேலு ஆய்வு
தாமரைப்பாக்கம் அருகே 6 வழி சாலை பணிகளை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ.வேலு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான 6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஸ்ரீ பெருமந்தூர் இருங்காட்டுக்கோட்டை ஒரகடம் ,சிங்கப்பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடியவர்கள் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன
அவற்றை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022 ஆம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் 12,301 திட்ட நிதி மதிபட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பிரிவு ஒன்றின் படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு இரண்டின்படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13கிலோ மீட்டர் வரையிலும்,
பிரிவு மூன்றின் படி திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் வெங்கத்தூர் வரையிலும்,பிரிவு நான்கின்படி ஸ்ரீபெரும்புதூர் சிங்க பெருமாள் கோவில் வரை 24 கிலோமீட்டர் வரையும்,பிரிவு ஐந்தின் படி சிங்கப்பெருமாள் கோவில் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 30 கிலோமீட்டர் என மொத்தம் 133 கிலோ மீட்டர் வரை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள்,5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச் சாலை வரை இரண்டாவது பிரிவாக நடைபெறும் பணிகளை விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது 133 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள சாலையின் வரைபடங்கள் சாலை பணிகளுக்கு பயன்படுத்தும் கட்டுமான பொருட்கள்,, வேலை செய்யும் முறைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வரும் 2025-க்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.