கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

முதலவர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்தியது போல் மூன்றாவது அலை கட்டுபடுத்தப்படும்

Update: 2021-08-02 11:02 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். பின்னர், வீதி,வீதியாக சென்று பொதுமக்களிடம் கொரோனா துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில், முக கவசம் இல்லாமல் இருந்த சாலையோர வாசிகளுக்கு, அமைச்சர் முக கவசத்தை அணிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு. நாசர் மேலும் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மக்கள் முழுமையாக ஒத்துழைப்புத்தர வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களில் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்தியது போல், மூன்றாவது அலையும் கட்டுபடுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அமைச்சர் நாசர்.

Tags:    

Similar News