ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்
ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சுமார் 25 லட்சம் மதிப்பில் 492 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் பலகையை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.