6 வழிச் சாலை பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு

தச்சூர்-முதல் சித்தூர் வரை நடைபெற்று வரும் 6.வழிச் சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

Update: 2024-07-25 06:15 GMT

தச்சூர் - சித்தூர் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை பல்வேறு நகரங்களுடன் இணைத்திடும் வகையில் 6வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதானி துறைமுகத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது சென்னை வெளிவட்ட சாலை, சென்னை எல்லைச்சாலை, தச்சூர் - சித்தூர் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சாலை பணிகள் முடிவடைந்துள்ள தூரம், சாலை பணிகளின் எவ்வாறு நடைப்பெற்று வருகிறது என்றும் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் ஏ.வ.வேலு கேட்டறிந்தார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத்தில் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்போது அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News