வணிகர் தினத்தை கொடியேற்றி முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கிய வியாபாரிகள் சங்கம்
38வது வணிகர் தினத்தை முன்னிட்டு அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகில் கொடியேற்றி முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீரை வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர்.;
வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 38வது வணிகர் தினத்தை முன்னிட்டு அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகில் கொடி ஏற்றி, பொது மக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, சங்கத்தின் தலைவர் மகாராஜா, பொதுச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் செந்தில் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார், துணைத் தலைவர் ரமேஷ், கிருஷ்ணன், ஆறுமுகம் அனைவருடன் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.