பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம்

பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.;

Update: 2023-08-27 11:08 GMT

கன்னிகாபுரம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த கன்னிகாபுரம் ஊராட்சியை சேர்ந்த வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சென்னை கே.கே.நகர் ரோட்டரி கிளப் மற்றும் பார்வதி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,பல் மருத்துவம்,கண் மருத்துவம், எலும்பு சம்பந்தமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.இம்முகாமில், 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கன்னிகாபுரம், கோடுவெளி,பூச்சிஅத்திப்பேடு, காரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.


இந்த மருத்துவ முகாமுக்கு கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிமுரளி தலைமை தாங்கினார்.வார்டு உறுப்பினர்கள் பிரகாஷ், எஸ்.கே.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் ஏ.பி.கண்ணா,சென்னை கே.கே.நகர் ரோட்டரி கிளப் தலைவர் கே.சுரேந்தர்ராஜ், செயலாளர் ஹன்னா ஜோன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

இதில்,எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி மு க  செயலாளர் கோடுவெளி தங்கம்,முரளி,எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் முனுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் காஞ்சனாமுனுசாமி,ஆசாசுரேஷ்,சீனிவாசன்,அன்பழகன்,கணேசன்,கே.எழிலரசன்,எம்.எஸ்.மணி,எஸ்.சீனிவாசன்,வி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் கன்னிகாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரகு வரவேற்றார்.முடிவில்,பூச்சி அத்திப்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முரளி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் குமார்,வெங்கடேசன், செல்வம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News