கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

Update: 2024-06-11 04:30 GMT

திருவள்ளூர் மாவட்டம்கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று 10-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இதில் கால் நடை வளர்ப்போர் கட்டாயமாக தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பால் விற்பனை செய்வதை தவிர்த்து விட்டு அரசு பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொடுப்பதினால் பொது மக்களுக்கு மானிய விலையில் பால் சேருவதால் பொதுமக்கள் பயனடையதாகவும்

பால் உற்பத்தியாளர்கள் ஒரு மாட்டு பாலை சொசைட்டிக்கு கொடுத்துவிட்டு 10 மாட்டு பாலை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். யாரெல்லாம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு தனியாருக்கு பால் கொடுக்கின்றார்களோ அவர்களை உறுப்பினரிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இறுதியில் கூட்டுறவு சங்கத்தில் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை உரிமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன்.

காக்களூர் ஆவின் தொழிற்சாலைபொது மேலாளர் ராஜேஷ்.உதவி பொது மேலாளர் பானுமதி.மற்றும் கால்நடை மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன்.உதவி இனை இயக்குனர் பாஸ்கர், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News