திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேனீ கொட்டியதில் பலர் காயம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேனீ கொட்டியதில் பலர் காயம் அடைந்தனர்.

Update: 2024-06-06 07:28 GMT
தேனீ கொட்டியதில் காயம் அடைந்த முதியவர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேன் குளவி கூடு கலைக்கப்பட்டதால் குளவிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களையும் விரட்டி விரட்டி கொட்டியதால் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம்  அடைந்தனர். 62 வயது முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிவன் கோவில் பின்புறம் அடர்ந்த மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஒன்றில் தேன் கூடு கட்டியிருந்தது. இது திடீரென கலைந்தது. இதனால் தேன் கூண்டில் இருந்த குளவிகள் தன்னிச்சையாக வெளியே பறந்து வந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களையும், ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்பவர்கள் மற்றும் சிவன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை தேன் குளவி விரட்டி விரட்டி கொட்டியது.


இதில் சிவன் கோயில் அருகே படுத்துக்கொண்டிருந்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்( வயது 62) என்ற முதியவரை கொட்டி உள்ளது.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணி( வயது 58) மற்றும் அரவிந்தராஜ் கன்னியம்மாள் பாலகிருஷ்ணன், கணேஷ் குமார் உட்பட10.க்கு மேற்பட்டோர் தேன் குளவி கொட்டியதில்பலத்த காயம் அடைந்தனர்.இதில் சுப்பிரமணி, சண்முகம் ஆகியோரை 108 அவசர ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் மற்றும் புகை அடித்ததில் அங்கிருந்த குளவிகள் சென்று விட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பாக ஏற்பட்டது.

Tags:    

Similar News