திருவள்ளூர் மாவட்டம் வெண்மனம் புதூர் கிராமத்தில் லாரி டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (36). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் ராமன் கோயில் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து அரசு குவாரியில் சவுடு மணலை ஏற்றிக்கொண்டு வெண்மனம் புதூர் ஏரிக்கரையோரம் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தீனா (24) மற்றும் அஜித் ஆகிய இருவரும் டிரைவர் பரசுராமனை இவ்வழியாக வந்தது குறித்து அவதூறாக பேசி கையில் வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்ததாக தெரிகிறது.இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரசுராமன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.