ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராச்சி பகுதியில் பிரபல சிவன் கோயில் உள்ளது, இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சிவன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் சிவன் கோவிலில் பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு சென்ற நிலையில் காலை திறப்பதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 10,000 ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பதும் சில்லறையாக இருந்த 40 ரூபாய் மட்டும்உண்டிலேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது
இதனை அடுத்து பூசாரி அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்
அந்த பதிவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பழைய காலத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களை நினைவூட்டும் வகையாக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு அரைகுறை ஆடையில் கோவிலில் உள்ளே நுழைவதும் பின்னர் கோவில் உண்டியலில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதும் என்ற காட்சி பதிவாகி உள்ளது.இதனை அடுத்து சி.சி.டி.வி. பதிவிகளைக் கொண்டு அந்த 25 வயது மதிக்கத்தங்க இளைஞர் யார் என்பதை ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.