பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள் கோரிக்கை

அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறந்து வைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-03-27 03:45 GMT

புத்தகங்கள் மற்றும் நாற்காலிகள் காணாமல் போன நூலகம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, இ சேவை மையம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம். மற்றும் நூலகம் உள்ளிட்டவை அரசு சார்ந்த நிர்வாகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் நூலக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு அதில் சுமார் 2000க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிராம மக்கள் படித்து பயன் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் அப்பகுதியை சார்ந்த படித்து முடித்த இளைஞர்களும். பள்ளி மாணவி மாணவர்கள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் என பலரும் நாள்தோறும் இந்த நூலகத்திற்கு வந்து நாளிதழ்கள், படித்து முடித்த இளைஞர்கள் அறிவு சார்ந்த புத்தகங்களையும், படித்து பயன் பெற்று வந்தனர்.

கிராம மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய கிராமப்புற நூலகம் தற்போது நூலகர் இல்லாமல் மூடி கிடப்பதால். அதில் இருந்த புத்தகங்கள் மற்றும் நாற்காலிகள் காணாமல் போய்விட்டது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

இது குறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மக்கள் தெரிவிக்கையில கடந்த காலங்களில் கைபேசி இல்லாத நேரத்தில் மாணவர்களுக்கும் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் இந்த நூலகத்திற்கு நாள் தோறும் சென்று நாளிதழ்களையும், புத்தகங்களை படித்து பயன்பெற்று வந்தனர்.

இந்த நூலகங்களில் குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணியில் நியமித்து நூலகத்தை நடத்தி வந்தனர். காலப்போக்கில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு நூலகத்தை மூடப்பட்டது. இதே நிலைமை தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் நீடித்து வருவகிறது. 

எனவே மீண்டும் அரசு இதன் மீது கவனம் செலுத்தி அனைத்து கிராமங்களில் மூடப்பட்டு காணப்படும் நூலகங்களில் நூலகர்களை அமைத்து மீண்டும் நூலகத்தை திறக்க வேண்டும் என்று பல தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News