திருவள்ளூர் டாஸ்மாக் குடோனில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயம்
திருவள்ளூர் டாஸ்மாக் குடோனில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயமானது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர் டாஸ்மாக் குடோனில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில் பெட்டிகள் மாயமானது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 265-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விற்பனைக்கு இங்கிருந்து மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த குடோன் வளாகத்திலேயே மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
லாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர்கள் மதுபான பாட்டில்களை பெட்டி,பெட்டியாக ஏற்றி அனுப்புவது வழக்கம். இதனை டாஸ்மாக் ஊழியர்கள் ஆய்வு செய்து அதன் பிறகே அனுப்பப்படுவது வழக்கம். திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணி காலியாக இருப்பதால் கிழக்கு மாவட்ட மேலாளர் ரேணுகா பொறுப்பு அதிகாரியாக நிர்வகித்து வருகிறார்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் காணாமல் போனதாக செய்திகள் வெளியானது.
இதன் எதிரொலியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரேணுகா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்களை செய்தி சேகரிக்கவும், படம் பிடிக்க விடாமலும் ஒருமையில் பேசி தகராறு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்பட்டது.