ஆட்சியர் அலுவலகத்தில் நூலக பணிகள் விறுவிறுப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள நூலகம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-03 04:45 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது நூலகம் மக்கள் மகிழ்ச்சி.

நூலகம் என்பது புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்படும் அறிவுக்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது. அப்பேர்ப்பட்ட நூலகம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியை கண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூரிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக புத்தகத்தை ஒன்று படிக்க வேண்டும் என்ற ஒரு ஆவல் அவரிடம் உள்ளது.

எனவே புத்தகங்களை படிக்க நூலகம் திறக்கப்பட உள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த நூலகத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் பயன் பெறுவார்கள் மாணவச் செல்வங்கள் தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள பொது அறிவு வளர்த்துக்கொள்ள பேரு உதவியாக இந்த நூலகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை புதிதாக திறக்கப்பட உள்ள நூலகத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்த நூலகத்திற்கான புத்தகம் அடக்கி வைக்கும் அறைகள் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News