திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்கு தணிக்கை குழு ஆய்வு
சட்டப்பேரவை பொது கணக்கு தணிக்கை குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு தணிக்கை குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மோடி அரசின் 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியிருப்பதாக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை ஆரம்ப சுகாதார மையம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை ஆய்வு செய்த போது தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டப்பேரவை பொது கணக்கு தணிக்கை குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவம், சுகாதாரம்,நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை கட்டிட உறுதி தன்மை மருத்துவர்கள் செயல்பாடுகள் போன்றவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தனர். பின்னர், மேல்நல்லாத்தூர் கிராம ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி( ஐ ஏ ஒய்) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்யப்பட்டு பின்பு மேல்நல்லாத்தூர் முதல் மணவாளன் நகர் வரை சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் சாலையுடன் இணைக்கும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரு வழி சாலையை, நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு தணிக்கை குழுவினர் கு.செல்வப் பெருந்தகை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொது கணக்கு தணிக்கை குழு உறுப்பினர்கள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, மொடக்குறிச்சி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, பரமத்தி வேலூர் சட்டமன்ற அ.தி.மு.க சேகர்,திருச்செங்கோடு,ஈஸ்வரன்,பூவிருந்தவல்லி ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ் குமார், மாவட்ட திட்டக்குழு தலைவர் சுக புத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை மோடி ஆட்சியில் 9.ஆண்டுகளில் 71/2 லட்சம் கோடி ஊழல்கள் நடைபெற்று இருப்பதாகவும், இனியும் பொய் பேச முடியாது உண்மையை மறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.