சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் - அகத்தியர் சேவா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

பூந்தமல்லி சவீதா மருத்துவ கல்லூரியின் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது;

Update: 2022-05-29 02:30 GMT

பெரியபாளையம் அருகே 82.பனப்பாக்கம் கிராமத்தில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் அகத்தியர் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சவிதா மருத்துவ கல்லூரியின் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

பெரியபாளையம் அருகே 82.பனப்பாக்கம் கிராமத்தில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் அகத்தியர் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சவிதா மருத்துவ கல்லூரியின் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 82 பனப்பாக்கம் கிராமத்தில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் அகத்தியர் சேவா சங்கம் இணைந்து நடத்திய பூந்தமல்லி சவீதா மருத்துவ கல்லூரியின் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி மனோகரன் தலைமை தாங்கினார் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட தொழிற் சங்க இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க செயலாளர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.என். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார் இம்முகாமில் பூந்தமல்லி சவிதா மருத்துவக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜன் தலைமையில் 18.க்கு மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண். மூக்கு தொண்டை காது மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக மாத்திரை மருந்துகளை வழங்கினார் இதில் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் துணை செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News