திருவள்ளூரில் நில எடுப்பு டிஆர்ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூரில் நில எடுப்பு டிஆர்ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.;
தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரையில் தேசிய நெடுஞ்சாலைக்காக தமிழக விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் லால்பகதூர் சாலையில் இருந்து மாநில செயலாளர் துளசி நாராயாணன் மற்றும் விவசாயிகள் பேரணியாக சென்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நில எடுப்பு டிஆர்ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் முறையாக நிலங்களை அளவீடு செய்யாமல் கையகப்படுத்துவதாகவும், மாவட்ட ஆட்சியர் 2.5 மடங்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் அந்த தொகையை விவசாயிகளுக்கு தராமல் நிலத்திற்குள் அத்துமீறி நுழைவதாகவும், மின் இணைப்பை மாற்ற மின்சாரத்துறை அதிகாரிகள் தேவையின்றி அலைக்கழிப்பதாகவும், கொடி, மரம், செடிகளுக்கு இதுவரை எந்த தொகை என தீர்மானிக்கவில்லை எனவும், வீடுகளுக்கான முதல் தவணை கொடுத்த 20 நாட்களில் வீடுகளை இடிக்க வருவதாகவும், போர்வெல், பைப்லைன், வீடு, மரங்களுக்கு நியாயமற்ற இழப்பீடு வழங்குவதாகவும் கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், முடிவு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.