கூலி தொழிலாளி இறப்பில் மர்மம்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மகள் மனு

திருவள்ளூர் அருகே தந்தை சாவில் மர்மம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மகள் புகார் மனு அளித்தார்.

Update: 2024-02-28 09:01 GMT

தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மகள்.

திருவள்ளூர் அருகே பாலாஜி என்பவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் இந்துமதி  மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது40) என்பவர் கூலி வேலை செய்து தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18.2.2024 அன்று அதே பகுதியில் வசித்து வரும் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் காலை 8.30 மணி அளவில் பாலாஜி என்பவரின் வீட்டிற்கு வந்து சிவக்குமார் நாயுடு என்பவருக்கு அம்மை போட்டுள்ளது எனவே அவருக்கு தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்பு காலை 11:30 மணி அளவில் சிட்டிபாபு என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பாபு நாயுடு மற்றும் குமார் இருவரும் பாலாஜி பலத்த காயங்களுடன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதைப் பார்த்த பாலாஜியின் தங்கை கற்பகம் என்பவர் எனது அண்ணனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டபோது அவர் குடிபோதையில் கீழே விழுந்துவிட்டார் என்று கூறி வீட்டில் சேர்த்து விட்டு சென்றுள்ளனர்.அவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததை பார்த்த உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் க்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரைப் பார்த்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறி சென்ற நிலையில் சிவக்குமார் நாயுடு கட்டாயப்படுத்தியதன் பேரிலும் இறந்த பாலாஜி என்பவர் முதல் பிள்ளை என்பதால் சுடுகாட்டில் எரித்து விட்டுள்ளனர். அதன் பிறகு பாபு நாயுடு என்பவரின் மாமனார் ஆதி ஐயா நாயுடு பாலாஜியின் தங்கை கற்பகத்திடம் உனது அண்ணன் குடித்துவிட்டு இறக்கவில்லை,

தென்னை மரத்தில் ஏறியதில் கீழே விழுந்து இறந்து விட்டார் என கூறியதன் பேரில் குடும்பத்தினர் 20 -2 -2024 அன்று புள்ளரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஆனால் காவல் நிலையத்தில் சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என்று அவருடைய மகள் இந்துமதி (வயது 21) என்பவர் என் தகப்பனாரை எந்தவித உபகரணங்களும் இன்றி தென்னை மரத்தில் ஏறச்சொல்லி அவர் கீழே விழுந்து இறந்து விட்டதை எங்களிடம் கூறாமல் திட்டம் போட்டு எங்களை ஏமாற்றி விட்டனர்/ எனவே எங்கள் தகப்பனாரின் சாவில் மர்மம் உள்ளது/ இதனை மறைத்த சிவகுமார் நாயுடு மற்றும் குமார். ராமகிருஷ்ணன். பாபு நாயுடு மற்றும் உடந்தையாக செயல்பட்ட ஹரிபாபு நாயுடு ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இந்துமதியுடன் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பிரேம் குமார் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவா, தொகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கிராம பொதுமக்கள் திரளானோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News