தி.மு.க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவி வழங்கினார்
தி.மு.க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள் ஏற்பாட்டில் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கனிமொழி காங்கிரஸ் பா.ஜ.க.வை தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி முடிவு தேர்தலுக்குப் பிறகுதான் உறுதி செய்யப்படும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிக பெண்கள் வெளிப்படைத்தன்மையாக பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்ல தொடங்கியுள்ளதாகவும். அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றம் கூட தற்போது ஆட்சியில் சொல்ல முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேடையில் பேசிய அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பெண்களுக்கான உரிமை முன்னேற்றம் கருத்தில் கொண்டு முக்கியத்துவம் தந்து வருவதாகவும் கூறினார். முன்னாள் முதல்வர் கலைஞர் போல தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வராக இருந்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். மகளிருக்கு பேருந்தில் இலவச கட்டணத்தால் ஆண்கள் மனைவியை பல்வேறு வேலைக்கு அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.