சுக்கிர காலபைரவர் சுவாமி மண்டல அபிஷேகம் பூர்த்தி விழா
Kala Bairavar Temple Function பொத்தூர் கிராமத்தில் சுக்கிர காலபைரவர் சுவாமி 48-ம் நாள் மண்டல அபிஷேகம் பூர்த்தி விழா;
செங்குன்றம் அருகே பொத்தூர் கிராமத்தில் சுக்கிர காலபைரவர் சுவாமி 48-ம் நாள் மண்டல அபிஷேகம் பூர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Kala Bairavar Temple Function
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி அம்மன் உடனுறை ஓதனவனேசுவரர் ஆலயத்தில் சுக்கிர காலபைரவர் சுவாமி எழுந்தருளிய விழாவை தொடர்ந்து 48-ம் நாள் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழா உபயதாரர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சபாபதி -லோகேஷ்வரிசபாபதி ஆகியோர் குடும்பத்தினர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரிவார தெய்வங்கள் மற்றும் சுக்கிர காலபைரவர் கலச வழிபாட்டுடன் தமிழ்வேள்வி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கலச வழிபாட்டில் வைத்துள்ள சுக்கிர காலபைரவர் கலசத்தை சபாபதி தனது திருகரங்களால் ஏந்தி ஆலய மாடவீதி உலாவந்தனர். இதணைத்தொடர்ந்து அடியார்கள் வாசுதேவன், சுரேஷ், அருண் ஆகியோர் காலபைரவரின் மூலமந்திரங்கள் முழங்க மூலவர் சுக்கிர காலபைரவர் சுவாமிக்கு கலச புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பால்,சந்தனம், இளநீர்,ஜவ்வாது,தேள், திருநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு ஆலய நிர்வாகிகள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.