ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்

Kadambattur Former CM Birthday Celebration மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளக்கு பரிசு வழங்கினார் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா.;

Update: 2024-03-04 04:45 GMT

Kadambattur Former CM Birthday Celebration

திருவள்ளூர் அருகே ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளையொட்டி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பி.வி.ரமணா தலைமையில் அதிமுக கட்சிக் கொடியேற்றி  வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாளையொட்டி,

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,

Kadambattur Former CM Birthday Celebration


கட்சிக் கொடியேற்றிய பின் பொதுமக்களுக்க இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா.

பின்னர் அதிமுக சார்பில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது,மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளானமுதல் பரிசு 15000, இரண்டாம் பரிசு 8000, மூன்றாம் பரிசு 5000, நான்காம் பரிசு 3000 ஆகிய பரிசுகளை மேற்கு மாவட்ட செயலாளர் பி வி,விரமணா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஒன்றிய நிர்வாகிகள் விஜயலட்சுமி ராமமூர்த்தி, மோகன் அரிச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமித் பாஷா,கிளை கழக செயலாளர் முஸ்லிம் பாளையம் காதர் பாஷா மூத்த நிர்வாகிகள் பக்கீர் , அப்பாஸ் இளைஞர் அணி நிர்வாகிகள் நூர் முகமது ,ரசித் மற்றும் கிளை கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News