காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கி.வீரமணி பிரச்சாரம்
திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி பேசினார்.;
ஜனநாயகம் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் பேசுகையில் தமிழகத்தில் மோடி முகாம் போட்டு தங்கினாலும் வெல்ல போவது இந்தியா கூட்டணி தான் எ
மோடி திருச்சூலம் வைத்து மிரட்டி மோடிக்கு எதிரானவர்களை வருமானத்துறை, அமலாக்கத்துறை , சி.பி.ஐ சோதனை செய்கிறார். துணை சபாநாயகர் பதவியை மோடி நிரப்பமால் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலை கேட்டால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கையில் வேல் கொடுத்து மோடி அனுப்பி வைக்கிறார். வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி வங்கியில் இருந்து 21 ஆயிரம் கோடி சுருட்டியவர் மோடி. மோடி ஊழல் தலைமீது வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் பற்றி பேசுகிறார். அவருக்கு ஊழல் பற்றி பேச என்ன இருக்கு? மோடி பொய் தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
ஏப்ரல் 19 ந் தேதி வாக்கு இயந்திரத்தில் பச்சை விளக்கு எரிகிறதா என பார்த்து வாக்களிங்க அப்போதுதான் உங்கள் அனைவரின் வீட்டில் விளக்கு எரியும் என்றார்.