திருவள்ளூரில் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கி வைப்பு
திருவள்ளூரில் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விபத்துகளால் ஏற்படும் எலும்புமுறிவு, நோய்பாதிப்பு, கன்று ஈனுவதில் சிரமம், போன்றவற்றால் பாதிக்கப்படும் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத சூழலில், தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பெரிதும் உதவியாக இருப்பதாகவும் அவசர சிகிச்சைக்காக இலவச தொலைபேசி எண்களான1962 மூலம் கால்நடை உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும் போது உரிய காலத்தில் உதவி கிடைப்பதால் கால்நடைகள் காப்பாற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 1 இலட்சம் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடமாடும் கால்நடை மருந்தகம் வீதம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 14 ஒன்றியம் உள்ளடக்கிய 5 நடமாடும் கால்நடை மருந்தக ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், வாகன சாவியினை வழங்கி நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட சேவையினை துவக்கிவைத்தார். அப்போது பொதுமக்களுக்கு ஆட்சியர் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்.திருவள்ளூர், கால்நடை பராமரிப்புத்துறை. மண்டல இணை இயக்குநர் சீனிவேலன், உதவி இயக்குநர்கள் சுமதி,மாவட்ட மேலாளர் ரமேஷ்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பரத் குமார், பூவரசன்,நிர்வாக அலுவலர் அன்பழகன், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.