பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் திறப்பு
பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.;
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஓட்டு கட்டிடத்தில் பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. இந்நிலையில், இக்கட்டிடத்தை தளம் போட்டு சீரமைத்து கட்டி முடிக்கப்பட்டது.
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய பொது நிதி 2021-22-ம் ஆண்டு நிதி தொகை ரூ.5 லட்சம் மதிப்பில் இக்கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் சியாமளாஸ்ரீதர்,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என்.ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்காரின் திருஉருவச் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்வரி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ், கிளை செயலாளர் சுரேஷ்,ஊராட்சி செயலர் சந்திரபாபு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.