திருவள்ளூர் அருகே இந்திய குடியரசு கட்சி மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

திருவள்ளூர் அருகே இந்திய குடியரசு கட்சி இந்திய தொழிலாளர் சங்கத்தின் புதிய மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2023-12-20 09:55 GMT

திருவள்ளூர் அருகே இந்திய குடியரசு கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய குடியரசு கட்சி மற்றும் இந்தியா தொழிலாளர் சங்கம் சார்பாக புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் அரிச்சந்திராபுரம் பகுதியில் இந்திய குடியரசு கட்சி மற்றும் தொழிலாளர் சங்கம் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தமிம் தலைமை தாங்கினார்.

மாநில பொருளாளர் ரவி, மற்றும் மாநில துணை பொது செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலாளர்,மற்றும், தமிழ் மாநில பொது செயலாளர்,டாக்டர்,மருதுபாண்டியன் கலந்துகொண்டு புரட்சியாளர் டாக்டர்‌ அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மேளதாளம் முழக்க பேரணியாக சென்று அரிச்சந்திராபுரம் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள புதிய கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம் சென்னை மண்டல மேலாளர் ராமஞ்சேரி, சங்கர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்,வீரேஷ்குமார்,மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கட்சி தொண்டர்கள்  கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News