திருவள்ளூர் நகராட்சியின் நுழைவுவாய்ப் பகுதியில் கருணாநிதி சிலை திறப்பு
திருவள்ளூர் நகராட்சி அலுவலக உயர்வு வாரையில் பகுதியில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.;
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் டாக்டர் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்,தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நகர்மன்றத்தலைவர், உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, மற்றும் கைத்தறி (ம) துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆகியோர் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் பணி ஆணை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பணி ஆணைகளை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறுகையில், நகராட்சிகளின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டு காலம் இருப்பதாகவும் அதனால் நகராட்சியோடு கிராமங்களை இணைப்பதற்கான ஐஏஎஸ் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு எந்த கிராமத்தை எந்த நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த பணிகள் முடிவடைவதை பொறுத்து முதலமைச்சர் உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பார், முதலமைச்சர் நினைத்தால் யாருக்கும் எப்போதும் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதுபோன்று உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகும் தகுதி இருப்பதாகவும், எனவே அந்த பதவி அவருக்கு கொடுக்கலாம் என தொண்டர்களும் ஆசைப்படுவதாகஅவர் தெரிவித்தார்,
மேலும் எந்த ஊராட்சிகளை நகராட்சியில் இணைத்தாலும் ஊராட்சி மக்களின் அனுமதியோடு தற்போது உள்ள ஊராட்சித் தலைவர்களின் பதவி காலம் முடியும் வரை காத்திருந்து பின்னர் நகராட்சியில் சேர்க்கப்படும், என்றும், ஏழைகள் செய்து வரும் 100 நாள் வேலையும் கெடுக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை எனவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை ஊராட்சிகளை நகராட்சிகளோடு சேர்ப்பதற்கான காரணம் என அவர் தெரிவித்தார்.