திருவள்ளூரில் இன்று 1008 பேருக்கு கொரோனா, 8 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 8 பேர் இறந்தனர்.

Update: 2021-05-10 14:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 1008 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 581 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 8182 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 72, 190 ஆகவும், இதில் 63, 104 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News