கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் கைது

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை அடித்துக்கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-30 08:15 GMT

கொலையான லட்சுமி, கைது செய்யப்பட்ட தர்மையா.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிபுத்தூர் கிராமத்தில் கேசவன் என்பவர் எட்டு ஏக்கர் மாந்தோப்பை குத்தகைக்கு மாந்தோப்பை எடுத்து எடுத்து நடத்தி வருகிறார். அதில் காவலாளியாக ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த புட்டி ரெட்டி கண்டிகை கிராமப் பகுதி சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதியினரை தர்மையா,(24) மனைவி லட்சுமி,(22) இவர்களுக்கு மூன்று வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில் இருவர் குடும்பத்துடன் பணிக்கு அமர்திய நிலையில்,  கடந்த 23 ஆம் தேதி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தர்மையா மனைவியை அடித்து கொலை செய்து விட்டு மாந்தோப்பிலேயே புதைத்து விட்டு சொந்த ஊருக்கு மகனுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில். உறவினர்கள் மனைவி லட்சுமி எங்கே விசாரித்துள்ளனர். இதில் குடி போதையில் இருந்த தர்மையா கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை அடித்து மாந்தோப்பில் புதைத்து வைத்ததாக தெரிவித்து குழந்தையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து லட்சுமியின் உறவினர்கள் மாந்தோப்பு உரிமையாளர் கேசவனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து உரிமையாளர் கேசவன் பாதிர்வேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பெயரில் நேற்று மாந்தோப்பில் லட்சுமியின் சடலத்தை அழகிய நிலையில் தோண்டி எடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த கணவர் தர்மையாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News