100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும்: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Thiruvallur News -சுழற்சி முறையில் வேலை தரும் நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
Thiruvallur News -சுழற்சி அடிப்படையில் இல்லாமல், ஊராட்சியில் ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் வழங்குகிறது. அதன்படி இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 674 கோடியை விடுவித்துவிட்டது. இந்தச் சூழலில் மாநில அரசின் பங்கான 25 சதவீதம், அதாவது ரூ 224 கோடியை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டில் ஏறக்குறைய 2.92 கோடி பேர் வேலை செய்துள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்புகள் இல்லாமல் முடங்கிய கொரோனா காலத்தில், ஏழை எளிய கூலி விவசாயிகளுக்கு வாழ்வு கொடுத்தது இந்த 100 நாள் வேலைத்திட்டம் தான் என்றால் மிகையாகாது.
இந்நிலையில், நூறுநாள் வேலைக்கு காலை 7 மணிக்குள் பணித்தளத்திற்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்,அரசு நிர்ணயித்த தினக் கூலியான ரூ.281 ஐ வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் குறைந்த பட்ச கூலி சட்டத்தை உயர்த்த வேண்டும், வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தவில்லை என்றால் வேலை அட்டை கொடுக்க மறுப்பது, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெற்றுபவர்களுக்கு வேலை இல்லை என மறுப்பது சட்ட விரோதமாகும். இப்படி சட்டத்தை தவறாக கையாலும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மையங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்து.
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள் ரமணி, ருக்மணி, ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், சிஐடியு நிர்வாகிகள் பி.நடேசன், நடராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லியில் மாவட்ட பொருளாளர் ப.சசிகலா தலைமையிலும், மீஞ்சூரில் ஒன்றிய தலைவர் கவிதா தலைமையிலும், எல்லாபுரத்தில் வட்டத் தலைவர் சி.ரம்மியா தலைமையிலும், திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுன.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
.