குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை
புதுப்பட்டு பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை;
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (28) இவர் திருவள்ளூர் பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடைபெற்று, அனுசூயா என்ற 3 வயது கைக்குழந்தை உள்ளது.
நடராஜனுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதனால் நடராஜன் நேற்று, தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவருடைய உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.