காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.;
கன்னிகைப்பேர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமையில் கலைஞர் நகர் பகுதியில் நடைபெற்றது. ஊராட்சி துணைத் தலைவர் மகேஷ், ஒன்றிய கவுன்சிலர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் குமரவேல் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை வாசித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் 82 பனப்பாக்கம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் துணைத் தலைவர் பேபி ஞானப்பிரகாசம், பற்றாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) மார்த்தாள் மனர்மணி,மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் குமரவேல் நன்றி கூறினார்.
கன்னிகைப்பேர் ஊராட்சி கிராம சபா கூட்டம் மன்ற அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் மேனகா சுப்பிரமணி,ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி வரவு,செலவு குறித்த அறிக்கையை ஊராட்சி செயலர் பொன்னரசு வாசித்தார். பின்னர் கூட்டத்தில் எச்.ஐ.வி,எய்ட்ஸ் மற்றும் தேசிய தன்னார்வ இரத்ததான தினம்,பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல் வடமதுரை கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில் அதன் தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், பற்றாளர் சிவலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் கல்பனா விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.
திருக்கண்டலம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் மதன் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் ஒன்றிய கவுன்சிலர் ரவி, துணைத் தலைவர் லிங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.வெங்கல் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது இதில் துணைத் தலைவர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கர், ஊராட்சி செயலர் உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் அரசு திட்ட பணிகள் குறித்து ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமையில் நடந்தது இதில் துணைத் தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அக்கரப்பாக்கம் ஊராட்சி கிராம சபா கூட்டம் செந்தமிழரசன் தலைமையில் நடந்தது இதில் துணைத் தலைவர் நளினி மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.