பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச மிதிவண்டிகள்: அமைச்சர் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுமார் 8.39 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.;

Update: 2024-01-04 00:45 GMT

மாணாக்கர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் காந்தி.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 115அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17391 பள்ளி மாணவர்களுக்கு 8.39 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திருவள்ளூரில் அமைந்துள்ள DRBCCC மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 157 மாணவர்கள் மற்றும் 179 மாணவிகள் என மொத்தம் 336 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

மேலும் இக்கல்வியாண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 115 பள்ளிகளில் பயிலும் 7645 மாணபர்கள், 9746 மாணவிகள் என மொத்தம் 17391 மாணாக்கர்கள் பயன்பெற்றனர். இதற்கான அரசின் நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.8.39 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளதாவும்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 115 பள்ளிகளில் பயிலும் 6643 மாணவர்கள். 10883 மாணவிகள் என மொத்தம் 17526 மாணாக்கர்கள் பயனடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இதனை தொடர்நசெய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறுகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 3.31 கோடி லட்சம் எண்ணிக்கையிலான இலவச வேட்டி சேலைகள் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், விஜி.ராஜேந்திரன், டி.ஜெ. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News